மருத்துவம் சார்ந்த, குறிப்பாக சித்த, ஆயுர்வேத மருத்துவம் தொடர்பான உயர்நிலை ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும், பேராசிரியர்கள், மாணவர்களுக்குப் பல்வேறு வகையான பயிற்சிகள் அளிப்பது குறித்தும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இரண்டு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் சுதா சேஷய்யன், தாமரை செல்வி ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பரமேஸ்வரி, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பெருவல்லூதி, பல்துறை பேராசிரியர்களும், மருத்துவர்களும் பங்கேற்றனர்.
இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக இப்பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் ஒருசேர்ந்து மருத்துவம் குறித்து ஆராய்ச்சி செய்யமுடியும். மேலும் வேதியியல், உயிர் வேதியியல் பிரிவுகளில் பல்வேறு மருத்துவ கண்டுபிடிப்புகளையும் செய்யமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து ப. சிதம்பரத்தின் பிரத்யேக பேட்டி!