சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
போக்குவரத்து கழகத்தில் கட்டண உயர்வுக்கு பின் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளதால் மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும், இரவில் பணிபுரிபவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வாகன வசதி, தங்கும் வசதி செய்து தரவேண்டும். ஊதிய உயர்வு ,அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். வரும் பிப்ரவரி 8-ம் தேதிக்கு முன்பாக அரசும் நிர்வாகமும் கலந்து பேசி இந்த கோரிக்கைகள் குறித்த நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பை வெளியிடாவிட்டால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். இது குறித்து நோட்டீஸை மெட்ரோ நிர்வாகத்திற்கு அனுப்பிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.