Pongal holidays: சென்னை: பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்காக சிறப்பு ரயில்களும், சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மக்கள் சிரமப்படாமல் இருப்பதற்காக மெட்ரோ நிர்வாகம், மெட்ரோ ரயில் நேரத்தை அதிகரித்துள்ளது. ஜனவரி 13 மற்றும் 14ஆம் தேதிகளில் மட்டும் நெரிசல் மிகு நேரங்களில் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள், இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து முனையங்களில் இருந்தும் செல்லும் கடைசி மெட்ரோ ரயில் சேவை இரவு 11 மணிக்குப் பதிலாக இரவு மணி 12 வரை நீட்டிக்கப்படுகிறது. ஜனவரி 18ஆம் தேதி மட்டும் அனைத்து முனையங்களிலிருந்தும் புறப்படும் முதல் மெட்ரோ ரயில் சேவை காலை 5 மணிக்குப் பதிலாக காலை 4 மணி முதல் இயக்கப்படும் என்றும்; எனவே 2023 ஜனவரி 13, 14 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பயணிகள் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு மெட்ரோ நிர்வாகம் வேண்டுகோள் வைத்துள்ளது.
இதையும் படிங்க: Madurai Flower Price Today: பொங்கல் பண்டிகை: கடும் விலையேற்றத்தில் மதுரை மல்லி!