ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டதையடுத்து கடந்த 7ஆம் தேதி முதல் சென்னை விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை வழித்தடத்திலும், 9ஆம் தேதி முதல் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆலந்தூர் வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த மூன்று நாள்களில் 24 ஆயிரத்து 354 பயணிகள் மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்தியுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதில், ஸ்மார்ட் கார்டு பயணச்சீட்டை 18 ஆயிரத்து 769 பேர் பயன்படுத்தியுள்ளனர் என்றும், 637 பயணிகள் க்யூர் ஆர் கோட் முறையைப் பயன்படுத்தியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (செப்.9) மட்டும் சென்னை மெட்ரோவில் 13 ஆயிரத்து 980 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். அதில், 11 ஆயிரத்து 91 பயணிகள் ஸ்மார்ட் கார்டைப் பயன்படுத்தியுள்ளனர். 325 பயணிகள் க்யூர் ஆர் கோட் முறையைப் பயன்படுத்தியுள்ளனர் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.