ETV Bharat / state

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின விழா! மெட்ரோ ரயில் விழிப்புணர்வு

author img

By

Published : Jun 12, 2019, 12:15 PM IST

சென்னை: குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மெட்ரோ ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு பயணம் நடத்தப்பட்டது.

child-labour-awareness-rally

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னையில் இன்று காலை 8 மணியளவில் தொழிலாளர் துறை சார்பாக மெட்ரோ ரயில் விழிப்புணர்வு பயணம் டிஎம்எஸ் ரயில் நிலையம் முதல் விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் வரை நடத்தப்பட்டது.

இதனைத் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில், தொழிலாளர் ஆணையர் நந்தகோபால், திரைப்பட நடிகர் விஜய் ஆண்டனி ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். இதில் 200 பள்ளிக் குழந்தைகளுடன் தொழிலாளர் நலத் துறை அலுவலர்களும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில், 'குழந்தைப் பருவம் என்பது மிக முக்கியமானது. சிறப்பான வருங்கால இந்தியாவை முன்னெடுக்க விரும்பினால் இந்தக் குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்' என்றுக் கேட்டுக்கொண்டார்.

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின விழா

பின்னர் பேசிய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில்:

இன்றைய நாள் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளிலும் அனைத்துத் தொழிற்சாலைகளிலும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.

Intro:மெட்ரோ ரயில் நிலையத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு

Body:மெட்ரோ ரயில் நிலையத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு

ஓர் ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி அன்று குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக உலக அளவில் அனுசரிக்கப்பட்டு வருகிறது சென்னையில் இன்று காலை 8 மணி அளவில் இத் தினத்தை அனுசரிக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் தொழிலாளர் துறை சார்பாக மெட்ரோ தொடர்வண்டி விழிப்புணர்வு பயணம் சென்னை டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையம் முதல் விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையம் வரை நடத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தொழிலாளர் ஆணையர் நந்தகோபால் திரைப்பட நடிகர் விஜய் ஆண்டனி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர் இந்த நிகழ்ச்சியில் 200 பள்ளி குழந்தைகளுடன் தொழிலாளர் துறை அலுவலர்களும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ஆண்டனி

குழந்தைப் பருவம் என்பது மிக முக்கியமானது. இந்த வயதில் வேலைக்கு செல்வது மிகவும் கொடுமையான விஷயம் ,இளம் வயதில் பள்ளிகளுக்குச் செல்ல முடியாமல் வேலைக்கு செல்வது வேதனைக்குரியது .இது எதிர்காலத்தில் நடக்க கூடாது அக்கம்பக்கத்தில் சிறுவர்களை வேலைக்கு செல்வதை கண்டால் அவர்களை தயவு செய்து முடிந்த வரை படிக்க வைக்க உதவி செய்யுங்கள் சிறப்பான வருங்கால இந்தியாவை முன்னெடுக்க விரும்பினால் இந்த குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் .இந்த விழாவினை ஏற்பாடு செய்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

பின்னர் பேசிய தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபில் :
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு விழா கொண்டாடப்பட்டு வருகிறது .இன்றைய நாள் நம்முடைய தமிழகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க அனைத்து அரசு அலுவலகங்களிலும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அனைத்து தொழிற்சாலைகளும் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்படுகிறது. இந்த குழந்தை தொழிலாளர் முறையை அகற்ற வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார் .இதனால் வேலையை விட்டு விட்டு குழந்தைகள் பள்ளிக்கு சென்றனர். இதேபோல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களும் கட்டாய கல்வி சட்டத்தை கொண்டு வந்தார். இதனால் அனைத்து குழந்தைகளும் கல்வி கற்றனர் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழித்து தமிழகம் முன்மாதிரியாக திகழும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.