ETV Bharat / state

மோக்கா புயல் தாக்கம்: அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு! - 4 days likely receive moderate rain

காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று மாலை புயலாக வலுப்பெறுவதால் தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

weather
மோக்கா புயல் தாக்கம்
author img

By

Published : May 10, 2023, 3:10 PM IST

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''நேற்று (மே 9) காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுப்பெற்று வடமேற்குத் திசையில் நகர்ந்து இன்று காலை (மே 10) 05:30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதியில் (போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 530 கிலோ மீட்டர் தென்மேற்கே) நிலை கொண்டுள்ளது.

இது வடக்கு - வடமேற்குத் திசையில் நகர்ந்து இன்று மாலை அதே பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும். இது மேலும் வட - வடமேற்குத் திசையில் நகர்ந்து படிப்படியாக வலுப்பெற்று நாளை (மே 11) காலை தீவிரப் புயலாகவும், நள்ளிரவு வாக்கில் மிகத்தீவிர புயலாகவும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.

அதன் பிறகு வடக்கு - வட கிழக்குத் திசையில் திரும்பி, நகர்ந்து மே 13ஆம் தேதி முதல் சற்றே வலுக்குறைந்து மே 14 காலை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையைக் கடக்கக்கூடும். புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 130 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே 11ஆம் தேதி முதல் மே 14ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகப்பட்ச வெப்பநிலை: மே 10ஆம் தேதி முதல் மே 14ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகப்பட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 4 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும். 13.05.2023 மற்றும் 14.05.2023 தேதிகளில் ஓரிரு இடங்களில் அதிகப்பட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress) ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகப்பட்ச வெப்பநிலை 36 - 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகப்பட்ச வெப்பநிலை 36 - 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: அந்தமான் கடல் பகுதிகள் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி காலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென் மேற்கு வங்கக்கடல் (தென்கிழக்கு வங்கக்கடல் ஒட்டிய பகுதிகள்) இன்றும் (மே10), நாளையும் (மே11) சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால், ஆழ் கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் நகை திருட்டு: இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.