சென்னை: தமிழகத்தில் மழை வாய்ப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஆக.23) ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (ஆக.24) முதல் ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஆக.28, 29 ஆகிய தேதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் சிவகாசி (விருதுநகர்) 12, திருத்தணி PTO (திருவள்ளூர்) 10, அரக்கோணம் (இராணிப்பேட்டை), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), வெம்பக்கோட்டை (விருதுநகர்) தலா 9, மாயனூர் (கரூர்), கிருஷ்ணராயபுரம் (கரூர்), திருத்தணி (திருவள்ளூர்), நத்தம் (திண்டுக்கல்) தலா 8, விருதுநகர், சென்னை விமான நிலையம், ஆலந்தூர் (சென்னை), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), ஆண்டிப்பட்டி (மதுரை), வாடிப்பட்டி (மதுரை) ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ மழையும் அதிகபட்சமாக பதிவாகியுள்ளது. கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: "நாடாளுமன்றத்தில் மோடியை பார்த்தால் பொறாமையாக உள்ளது" - டி.ஆர்.பாலு