வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், ஜூலை 21 ஆம் தேதி கேரளா, கர்நாடகாவில் கனமழைக்கு வாய்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை நிலவரம்
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர் தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
மிதமான மழைக்கு வாய்ப்பு
அடுத்த இரு தினங்கள் (19,20) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர் தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் ஒருசில உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
வங்க கடல்
ஜூலை 18 முதல் ஜூலை 20 ஆம் தேதி வரை, தெற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஜூலை 20 ஆம் தேதி மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அரபிக்கடல்
ஜூலை 18 முதல் ஜூலை 20 ஆம் தேதி வரை, வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இதனால் மேற்குறிப்பிட்ட தேதிகளில் மீனவர்கள், குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.