மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நாள் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் இன்று சென்னை பெருநகர மாநகராட்சி ரிப்பன் வளாகத்தில் சிறப்பு அலுவலர் மற்றும் ஆணையாளர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் கோவிந்தராவ், துணை ஆணையாளர் மதுசூதனன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.