ETV Bharat / state

"விவசாயிகளை இந்த அரசு கண்டுகொள்ளவில்லை" - 108வது நாளாக போராடும் மேல்மா கிராம மக்கள் பரபரப்பு புகார்!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் அலகு-3 திட்டத்தை கைவிடக் கோரி அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து 108 வது நாளாக சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 10:30 PM IST

சென்னையில் 108 வது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம்

சென்னை: செய்யாறு சிப்காட்டுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டமானது தொடர்ந்து 100 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியானது இன்று(அக்.17) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் அலகு 3 திட்டத்தை கைவிடக் கோரியும் தொழில்பேட்டைக்கு நிலம் கையகத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், மேல்மா பகுதி விவசாயிகள் தொடா்ந்து 100 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். செய்யாறு சிப்காட் தொழில்பேட்டை விரிவாக்கப் பகுதி எனப்படும் அலகு - 3 பகுதியில் அனக்காவூா் ஒன்றியம் தேத்துறை உள்வட்டத்தைச் சோ்ந்த வடஆளப்பிறந்தான், மேல்மா, தேத்துறை, இளநீா்குன்றம், குறும்பூா், நா்மாபள்ளம், அத்தி, வீரம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 3 ஆயிரத்து 200 ஏக்கரில் விவசாய நிலங்கள் இருந்து வருகின்றன.

100 நாட்களுக்கு மேல் தொடரும் போராட்டம்: இதனையடுத்து சிப்காட் தொழில்பேட்டை மேல்மா பகுதி விவசாயிகளுக்குச் சொந்தமான நிலங்களை கையப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மேல்மா உள்ளிட்ட 9 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் சாா்பில் மேல்மா கூட்டுச் சாலை அருகே கடந்த ஜூலை 7-ஆம் தேதி அன்று காத்திருப்புப் போராட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் விவசாயிகளின் போராட்டத்திற்கு, அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் இதுவரை அவர்களுக்கு கிடைவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் செய்யாறு பகுதி விவசாயிகள் 107 நாட்களாக போராட்டம் செய்துவந்த நிலையில், அதற்கு அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால் இன்று(அக்.17) 108 ஆவது நாளாக சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் போராட்டமானது நடைபெற்றது. இந்த போராட்டத்தில் விவாசாயிகள், முதியோர்கள் மற்றும் கிராமத்து இளைஞர்கள் என்று பல தரப்பினர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதையடுத்து "எங்களின் அறவழி போராட்டத்தை மாவட்ட ஆட்சியரும், சட்டப்பேரவை உறுப்பினரும், அமைச்சரும், ஏன் முதல்வரும் கூட எங்களின் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. சில அரசியல் பிரமுகர்கள் எங்களை ரவுடிகளை விட்டு மிரட்டும் முயற்ச்சியில் ஈடுப்படுகின்றனர். எங்களுக்கு நிலம் தான் நிரந்தரம்" என விவசாயிகள் கண்டனகோசங்களை எழுப்பி வருகின்றனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது விவசாயிகள் கூறுகையில் "செய்யாறு - மேல்மா பகுதியில் 11 கிராமங்கள் உள்ளடக்கிய மக்களின் நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைக்க முடிவு செய்து உள்ளனர். மேலும் இந்த கிராம பகுதியில் உள்ள 3 ஆயிரத்து 200 ஏக்கரில் 75% சதவீதம் நிலமானது, மூன்று போகமும் விளைய கூடிய விவசாய நிலம் ஆகும்.

ஆனால் அரசு அவற்றை தரிசு நிலங்களாகவே பார்க்கிறது. எப்படி விவசாய நிலங்களை விவசாயம் அற்ற நிலங்கள் என்று முடிவு செய்தார்கள் என்று தெரியவில்லை. மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கடந்த ஜூலை 2 ஆம் தேதி அன்று தொடங்கிய எங்களின் காத்திருப்பு போராட்டம், 107 நாட்களை கடந்து உறுதியுடன் தொடருகின்றது. விவசாயிகளுக்கான தனி பட்ஜெட்டை அறிவித்த தமிழக அரசு, விவசாயிகள் மீது அக்கறை இல்லாமல் செயல்பட்டு வருகிறது. விவசாயிகளின் நியாயமான போராட்டத்திற்கு மதிப்பளித்து மேல்மா சிப்காட் திட்டத்தை திரும்ப பெற வேண்டும்‌" என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒரே மாதத்தில் 40 பேரை பலி வாங்கிய பட்டாசு வெடி விபத்துகள்.. நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.