சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022 - 23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கடந்த 18ஆம் தேதி பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து 19ஆம் தேதி வேளான் நிதிநிலை அறிக்கையை எம் ஆர் கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இன்று (மார்ச் 21) முதல் மூன்று நாள்களுக்கு, நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்குகிறது. இதில், முதல் நாளான இன்று, முதலில், மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 5 பேருக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மேகதாது அணை தொடர்பாக தமிழ்நாடு சட்டபேரவையில் தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்தார்.
![mekedatu dam issue tamil nadu assembly debate on the budget mekedatu dam resolution in tamil nadu assembly mekedatu dam issue resolution மேகதாது அணை கட்ட எதிர்ப்பு மேகதாது அணை மேகதாது அணை கட்ட எதிர்ப்பு சட்டபேரவையில் தீர்மானம் தமிழ்நாடு சட்டபேரவை பட்ஜெட் மீதான விவாதம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-tnassembly-7209106_21032022090817_2103f_1647833897_575.jpg)
இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு விவகாரத்தில் திமுக அலட்சியம் காட்டுகிறது - ஓபிஎஸ்