தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலையானது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு கரோனா பரவலைக் கட்டுப்படுத்த 14 நாட்கள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
பெரும் தொழில் நிறுவனங்கள், முக்கியப் பிரமுகர்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நிதியுதவி அளித்து வருகின்றனர். எந்தெந்த தொழில் நிறுவனத்தினர் எவ்வளவு நிதியுதவி அளித்தனர் என்ற விவரங்களைக் கீழே காணலாம்.