சென்னை: சென்னை பட்டாளம் பகுதியைச் சேர்ந்த யமுனா, கடந்த ஓராண்டாக கே.எம்.சி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் ஈ.சி.ஜி தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று (மே.21) காலை தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு செல்லும் போது, அவர் பணியாற்றிய மருத்துவமனையின் எதிரே உள்ள ஒரு வழிப் பாதையில் சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது, ஈ.வி.ஆர் சாலையிலிருந்து வேகமாக வந்த கார், யமுனாவின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், யமுனாவின் தலையில் பலத்த காயம் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் யமுனாவை மீட்டு கே.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த விபத்தை ஏற்படுத்திய கார் சம்பவ இடத்தில் நிற்காமல் சென்றது. அவ்வாகனத்தை பொதுமக்கள் கெங்கு ரெட்டி சப்வே அருகில் விரட்டிப் பிடித்து, கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விபத்தை ஏற்படுத்தியவரிடம் காவல் துறையினர் தற்போது விசாரணை நடத்திவருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், காரை ஒட்டிவந்தவர் கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அப்துல் கவுஹீம் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆவின் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை!