மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான முதல் நாள் கலந்தாய்வின்போது இடங்களை தேர்வு செய்த மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேர்க்கை உத்தரவுகளை வழங்கினார்.
முதலமைச்சர் நேரடியாக சேர்க்கை உத்தரவுகளை வழங்குவதால் கலந்தாய்விற்கு வந்த மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பரிசோதனையில் நான்கு மாணவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் பகுதியை சேர்ந்த மாணவி, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த மாணவி, திருப்பூர் செட்டியார் தெருவை மாணவி, சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியை சேர்ந்த மாணவி ஆகிய 4 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அந்த மாணவர்களை கலந்தாய்வு முடிந்த பின்னர் மக்கள் நல்வாழ்வு துறையினர் தனிமைப்படுத்தி அவர்களின் மாவட்டத்தில் சென்று சிகிச்சை அளிக்க அறிவுரை வழங்கியுள்ளனர்.
மேலும் அந்த மாணவர்களுக்கு அவர்கள் தேர்வு செய்த மருத்துவக் கல்லூரிக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட சேர்க்கை உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வு துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மாநகராட்சிப் பள்ளியில் படித்த 8 மாணவர்கள் 7.5 இட ஒதுக்கீடு மூலம் மருத்துவம் படிக்க வாய்ப்பு!