ETV Bharat / state

தனியார் கல்லூரிகளில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு - Seven students appeal to Chennai High Court

சென்னை: புதுச்சேரயில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை, மேல்முறையீட்டு வழக்கு இறுதி தீர்ப்புக்குட்பட்டது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

chennai high court
chennai high court
author img

By

Published : Jan 6, 2021, 2:27 PM IST

புதுச்சேரியில் உள்ள ஸ்ரீமணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம், ஸ்ரீவெங்கடேஷ்வரா மருத்துவக் கல்லூரிகள் ஆகியவை தலா 55 இடங்களை அரசு ஒதுக்கீட்டு இடங்களாக ஒதுக்கின.

இதுகுறித்த அறிவிப்பை ரத்து செய்து, இந்தக் கல்லூரிகளில் உள்ள தலா 150 இடங்களில், 50 விழுக்காடு இடங்களை அரசு ஒதுக்கீட்டு இடங்களாக ஒதுக்கீடு செய்ய உத்தரவிடக் கோரி, அபிராமி, ஸ்வேதா உள்ளிட்ட ஏழு மாணவிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அந்த மனுவில், கடந்த 2006ஆம் ஆண்டின் மாணவர் சேர்க்கை விதிகளின்படி தனியார் மருத்துவக் கல்லூரிகள் 50 விழுக்காடு இடங்களை அரசு ஒதுக்கீட்டிற்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என குறிப்பிட்டனர்.

இவ்வழக்குத் தொடர்பாக பதிலளித்த புதுச்சேரி அரசு, புதுச்சேரி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், 50 விழுக்காடு இடங்களை வழங்க மறுத்துள்ளதாகவும், அதனால் 50 விழுக்காடு இடங்களை ஒதுக்க வேண்டுமென்றும் கோரப்பட்டது.

ஆனால், 2006ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விதிகள் தற்போது பொருந்தாது என்று கல்லூரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்தக் கல்லூரிகள் 50 விழுக்காடு இடங்களை அரசுக்கு ஒதுக்க ஒப்புக்கொண்டுள்ளதாக முடிவுக்கு வர எவ்வித ஆதாரமும் இல்லை எனக் கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து இந்த உத்தரவை எதிர்த்து மாணவ, மாணவிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மேல்முறையீடு வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை மேல்முறையீடு வழக்கு இறுதி தீர்ப்புக்குட்பட்டது. இதுகுறித்து தனியார் கல்லூரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆறு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: கடவுளை அடையும் வழியில் உங்கள் பெயரும் இருக்கும் - பிறந்தநாள் வாழ்த்துகள் ரஹ்மான்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.