அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற மருத்துவ ஆய்வக நுட்புனர் கூட்டமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் சிலர் தங்களின் கைக்குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். இதில் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆய்வக நுட்புனர் நிலை-2 பணியிடங்களை நிரப்பும்போது, மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடக்கூடாது என வலியுறுத்தினர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜெயலட்சுமி என்பவர் கூறுகையில், '' மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் டிப்ளமோ லேப் டெக்னீசியன் பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளனர். அதனை ரத்து செய்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்.
நாங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு படிக்கும் பொழுது, பன்னிரெண்டாம் வகுப்பில் மதிப்பெண்கள் பெறுவது குறைவாக இருந்தது. ஆனால் தற்பொழுது படிக்கும் மாணவர்கள் அதிக அளவில் மதிப்பெண்கள் பெறுகின்றனர். எனவே, இந்த முறையில் தேர்வு செய்தால் எங்களுக்கு அரசு வேலை கிடைக்காது'' என்றார்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் முத்தரையர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லையெனில் போராட்டம் நடத்துவோம்!