டெல்லியிலிருந்து இந்திய விமானப் படை தனி விமானம் ஒன்று சென்னை பழைய விமான நிலையம் வந்தது. அதில் முகக்கவசங்கள், மருத்துவப் பரிசோதனை கருவிகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட 780 கிலோ மருத்துவ உபகரணங்கள் வந்தடைந்தன.
ஏா் இந்தியா ஊழியர்கள், விமானப் படை வீரா்களின் கண்காணிப்பில் உபகரணங்கள் அடங்கிய பாா்சல்களை விமானத்திலிருந்து இறக்கப்பட்டன. அதன்பின்பு சென்னை விமான நிலைய அலுவலர்கள் மருத்துவ உபகரணங்களை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனா். வாகனங்கள் மூலம் மருத்துவ உபகரணங்கள் பார்சல்களைச் சென்னையிலுள்ள ஒமந்தூராா் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனா்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு!