கரோனா வைரஸ் பாதிப்பு தமிழ்நாட்டில் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் வெளிநாடுகளிலிருந்து மருத்துவ உபகரணங்கள் பெருமளவு இறக்குமதி செய்யப்படுகின்றன. அந்த வகையில் சென்னை விமான நிலையத்திற்கு நேற்று இரவிலிருந்து, அதிகாலை வரை நான்கு சரக்கு விமானங்கள் வந்துள்ளன.
இரவு 8 மணிக்கு துபாயிலிருந்து- 4,500 கிலோவும்,
இரவு 11 மணிக்கு துபாயிலிருந்து- 2,100 கிலோவும்,
இரவு 11.40 மணிக்கு ஹாங்காங்கிலிருந்து - 3,800 கிலோவும்,
அதிகாலை 4.30 மணிக்கு- 700 கிலோ மருத்துவ உபகரணங்களும் வந்துள்ளன.
இதையடுத்து வெளிநாடுகளிலிருந்து வந்த 10 ஆயிரத்து 600 கிலோ மருத்துவ உபகரணங்கள் அனைத்தையும் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினா் சா்வதேச சரக்ககம் மற்றும் கொரியா் பாா்சல் பகுதிகளில் பாதுகாப்பாக வைத்து, மருந்துகள் பரிசோதனை முடிந்து டெலிவரியாக அனுப்பியுள்ளனர்.
அதில், வென்டிலேட்டா் தயாரிப்பதற்கான உதிரிப்பாகங்கள், நவீன ரக தொ்மா மீட்டா்கள், மாஸ்க்குகள், கிளவுஸ்கள், கிருமி நாசினி உள்ளிட்ட மருத்துவப் பொருள்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஊரடங்குக்குப் பின் 50% பயணிகளுடன் பேருந்து இயக்கம்!