கரோனா தொற்றின் இரணடாம் அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக. ஆக்சிஜன் செறிவூட்டிகள், வெண்டிலேட்டா் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் பெருமளவு வரவழைக்கப்படுகிறது.
இந்நிலையில், ஆந்திரமாநிலம் விஜயவாடாவிலிருந்து இந்திய விமானப்படை தனி விமானம் சென்னை விமானநிலையம் வந்தது. அதில் 56 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 60 வெண்டிலேட்டா்கள், டிராலியுடன் இணைக்கப்பட்ட 25 வெண்டிலேட்டா்கள் , மருத்துவ உபகரணங்கள் வந்தன.
இதையும் படிங்க:
'போராளியின் வழியில் வெற்றிப் பயணம்' - கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை