ETV Bharat / state

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு மாணவர்கள் எதிர்ப்பு - போராட்டம்

சென்னை:தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்க்கும் வகையில், வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

medical college student protest
author img

By

Published : Aug 6, 2019, 4:15 AM IST

Updated : Aug 6, 2019, 9:47 AM IST

கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய மருத்துவ ஆணைய மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு தற்போது குடியரசுதலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இம்மசோதாவில் உள்ள சில குறிப்பிட்ட பிரிவுகளை நீக்ககோரியும் இம்மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிக்ககூடாது என்றும், மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறகணித்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

இதில், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு குடியரசு தலைவருடைய ஒப்புதல் வழங்ககூடாது. பிரிட்ஜ் கோர்ஸை கொண்டு வரக்கூடாது. இந்திய மருத்துவ கழகத்தை கலைக்ககூடாது. நெக்ஸ்ட் தேர்வை திணிக்க கூடாது. உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

மதுரை மருத்துவக்கல்லூரி மாணவர்களின் போராட்டம்

இதில் ஒருபகுதியாக தருமபுரி, மதுரை, சென்னை, திருச்சி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் மாணவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என்று எச்சரித்தனர்.

Intro:tn_dpi_01_medical_College_student_ protest_img_7204444Body:tn_dpi_01_medical_College_student_ protest_img_7204444Conclusion:தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை கண்டித்து தருமபுரியில் 200 க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவ மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு குடியரசு தலைவருடைய ஒப்புதலை பெறகூடாது. இந்திய மருத்துவ கழகத்தை ஒழிக்ககூடாது. NEXT தேர்வை திணிக்க கூடாது. உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் இன்று தமிழகம் முழுவதுமாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனடிப்படையில் தருமபுரியில் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவ மாணவிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்பாட்டத்தில் கருப்பு பட்டைகள் அணிந்தும், பதாதைகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து மனித சங்கிலி போராட்டத்திலும் ஈடுபட்டனர்
Last Updated : Aug 6, 2019, 9:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.