ஸ்பெயின் நாட்டின் பார்சிலோஸ் (Barcelos) நகரத்தில் குதிரை தடை தாண்டும் போட்டி மே மாதம் 17ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் 7 நாடுகளைச் சேர்ந்த 300 குதிரைகள் கலந்துகொண்டன.
இந்தியாவில் இருந்து 3 குதிரைகள் மற்றும் நான்கு குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்றனர். இதில், சபரி விகாஸ் 80 செ.மீ. போட்டியில் இரண்டாம் இடமும், அகில் ரித்விக் என்ற மாணவர் 80 செ.மீ. போட்டியில் மூன்றாம் இடமும், மாணவி அவந்திகா 100 செ.மீ. போட்டியில் 6ஆவது இடமும் பெற்றுள்ளனர்.
இவர்கள் 12-18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல், பொதுப் பிரிவில் பங்கேற்ற பயிற்சியாளர் சரவணன் கந்தசாமி 110 செ.மீ. பிரிவில் 3ஆம் இடம் பெற்றுள்ளார். சர்வதேச அளவில் வெற்றிபெற்று நாடு திரும்பியுள்ள இந்த வீரர்கள், குதிரைகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.