சென்னை: நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆட்டோ செர்வ் 2022 என்ற 3 நாள் கண்காட்சி தொடங்கியது. இதை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழகத்தில் 100 மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 400 பேருந்துகள் வாங்குவதற்கான பணியை போக்குவரத்து துறை மேற்கொண்டு வருகிறது.
மழைக்காலங்களில் பேருந்து பணிமனைகளில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சென்னையில் 16 பேருந்து பணிமனைகளை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பருவ மழை நேரத்தில் பேருந்துகள் இயக்கும்போது பேருந்து இருக்கைகளில் மழைநீர் பாதிப்பு இல்லாமல் இருக்க போக்குவரத்து ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். CMDA நிர்வாகம் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது" என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : தொடரும் மழை...கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை