இது குறித்து மதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த 18ஆம் தேதி மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் சென்னை போரூர் ராமசந்திர மருத்துவமனையில் உடல்நல பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
![மருத்துவமனை அறிக்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4200542_gf.jpg)
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடல்நிலை சீராக இருப்பதாகவும், சில நாட்கள் ஓய்வில் இருக்கும்படியும் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த மாதம் 21, 22 ஆகிய தேதிகளில் தேனியில் நடைபெறவிருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பரப்புரைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.