ETV Bharat / state

மருத்துவம், பொறியியலில் சேர முடியாதபடி சதி:  வைகோ கண்டனம் - syllabus of 11th standard

சென்னை: தமிழ்நாடு அரசு 11ஆம் வகுப்பு பாடத்திட்டங்களை மாற்றும் அறிவிப்பைக் கைவிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

வைகோ
வைகோ
author img

By

Published : Jun 25, 2020, 12:52 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்புக் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான பாடப்பிரிவுகள் மூன்று பகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ளன. மொழிப்பாடங்கள் ஒன்று, இரண்டு ஆகிய பகுதிகளைத் தவிர்த்து, எஞ்சியுள்ள மூன்றாம் பகுதியில் முக்கியப் பாடங்களுக்கு என்று நான்கு பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவை ஒவ்வொன்றிலும் மொத்தம் 300 மதிப்பெண்கள் என மூன்றே பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும் தலா 100 மதிப்பெண்கள்) இருக்கும் வகையில் புதிய பாடப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதன்படி பகுதி 1 - தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் பாடங்கள், பகுதி 2 - ஆங்கிலம், பகுதி 3 முக்கிய பாடங்கள், அதில் முதல் பிரிவு கணிதம், இயற்பியல், வேதியியல் என்றும், இரண்டாம் பிரிவு இயற்பியல், வேதியியல், உயிரியல் என்றும், மூன்றாம் பிரிவு கணிதம் இயற்பியல், கணினி அறிவியல் என்றும், நான்காம் பிரிவு வேதியியல், உயிரியல், மனையியல் என்றும் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், மொத்த மதிப்பெண்கள் 600-க்கு பதில், இனி 500 ஆக இருக்கும். இதன் மூலமாக மாணவர்கள் 11 ஆம் வகுப்பில் சேரும்போதே தாங்கள் எந்த பிரிவில் உயர் கல்வி பயில விரும்புகிறார்களோ அந்த படிப்பிற்கான பாடப்பிரிவு தேர்வினை இறுதி செய்துகொள்ளமுடியும். இதனால் கூடுதல் பாடங்களைப் படிப்பதைத் தவிர்த்துக் கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

மருத்துவக் கல்லூரிகளில் சேர இடம் கிடைக்காத மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட முன்னணி பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் சேர்ந்து பயில விரும்பினால், மாற்றப்பட்ட பாடப் பிரிவுகளின் கீழ் 12 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருந்தாலும் பொறியியல் படிப்புகளில் சேர முடியாது.

ஏனெனில் பிரிவு மூன்று மற்றும் பிரிவு நான்கில் சேரும் மாணவர்கள் மருத்துவப் படிப்பு, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பம் போடவே முடியாத நிலைக்குத் தள்ளும் வகையில் புதிய பாடப் பிரிவுகள் மூலம் சதித் திட்டம் தீட்டப்பட்டுஇருக்கிறது.

மத்திய அரசு திணித்துள்ள நீட் நுழைவுத் தேர்வு தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்புகளைக் கானல் நீராக ஆக்கியுள்ளது. இந்நிலையில், தற்போது பொறியியல் கல்வி கனவையும் தகர்க்கும் நிலையைத் திட்டமிட்டே தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை உருவாக்கி இருக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.

ஏனெனில் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பொறியியல் கல்லூரிகளில் வடநாட்டு மாணவர்களைச் சேர்க்கும் மத்திய அரசின் வஞ்சகப் போக்கிற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு பலியாகி இருக்கிறது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இது வன்மையான கண்டனத்துக்கு உரியது. எனவே தமிழ்நாடு அரசு 11 ஆம் வகுப்பு பாடத் திட்டங்களை மாற்றும் அறிவிப்பைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:ஜூன் 29ஆம் தேதி மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் - ராகுல் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.