சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணியை திமுக தொடங்கியுள்ள நிலையில் மதிமுக சார்பில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மல்லை சி.ஏ. சத்யா (கழகத் துணைப் பொதுச்செயலாளர்), மு. செந்திலதிபன் (கழக ஆய்வு மையச் செயலாளர்), வழக்குரைஞர் கு. சின்னப்பா (கழக உயர்நிலைக்குழு உறுப்பினர்), ஆவடி அந்திரிதாஸ் (கழகத் தேர்தல் பணிச் செயலாளர்) ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் திமுக சார்பில் மதிமுக, விசிக உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ள நிலையில், பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐபேக் இளைஞர் படையுடன் தேர்தல் களம் காணும் திமுக