ETV Bharat / state

'எம்பிபிஎஸ் படிப்பில் சேர ஆன்லைன் கவுன்சிலிங்' - chennai

சென்னை: தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வை ஆன்லைன் மூலம் நடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

'எம்பிபிஎஸ் படிப்பில் சேர ஆன்லைன் கவுன்சிலிங்'
author img

By

Published : Apr 1, 2019, 5:20 PM IST

எம்டிஎம்எஸ் ஆகிய முதுகலை மருத்துவபடிப்பிற்கான கலந்தாய்வினை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துபேசினார். அப்போது "முதுகலைப் படிப்பில் சேர்வதற்கான தரவரிசை அடிப்படையில் சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உரிய இடங்களுக்கான கலந்தாய்வு தற்போது நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். முதுகலை படிப்பிற்கான ஒதுக்கீட்டிற்கு அளிக்கப்பட்ட இடங்கள்போக 912 இடங்களில் தமிழக ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

அதேபோல் சுயநிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில்151 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இந்த கலந்தாய்வு இன்று துவங்கி 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதுகலைப் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் பெறப்பட்டதில் எந்தவித பிரச்னையும் இல்லை. எனவே எம்பிபிஎஸ் படிப்பிற்கான கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.

Intro: எம்பிபிஎஸ் படிப்பில் சேர ஆன்லைன் கவுன்சிலிங்
மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்

Body:சென்னை, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான கலந்தாய்வை ஆன்லைன் மூலம் நடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
எம் டி, எம் எஸ் ஆகிய முதுகலை மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு மருத்துவமனையில் இன்று துவங்கியது. இந்தக் கலந்தாய்வில் முதுகலைப் படிப்பில் மொத்தம் உள்ள 1761 இடங்களில் 749 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்பட்டன. மீதமுள்ள 912 இடங்களுக்கு இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது. இவற்றில் எம்டி முதுகலைப் படிப்பில் 558 இடங்களும் எம்எஸ் முதுகலை படிப்பில் 352 இடங்களும் இருக்கின்றன. இந்தாண்டு 154 இடங்கள் முதுகலைப் படிப்பில் கூடுதலாக பெறப் பட்டுள்ளன.
முதுநிலைப் படிப்பிற்கான கலந்தாய்வினை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேரில் ஆய்வு செய்தார். சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் கலந்துகொண்டு கல்லூரியை தேர்வு செய்த மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், முதுகலைப் படிப்பில் சேருவதற்கான தரவரிசை அடிப்படையில் சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உரிய இடங்களுக்கான கலந்தாய்வு தற்போது நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். முதுகலை படிக்க இங்கே ஒதுக்கீட்டிற்கு அளிக்கப்பட்ட இடங்கள் போக 912 இடங்களில் தமிழக ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். அதேபோல் சுயநிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 151 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இந்த கலந்தாய்வு இன்று துவங்கி 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதுகலைப் படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் பெறப்பட்டதில் எந்தவித பிரச்சினையும் இல்லை. எனவே எம்பிபிஎஸ் படிப்பிற்கான கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழு செயலாளர் செல்வராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது, முதுகலை மருத்துவப் படிப்பில் சேருவதற்காக தகுதி பெற்றவர்கள் பத்தாயிரத்துக்கு 27 பேர் உள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு தர வரிசை படி நடைபெறும் என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.