சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான கட்ஆப் மதிப்பெண்கள் கடந்தாண்டைவிட இந்தாண்டு 5 முதல் 46 வரை குறையும் என கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது, "எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் நீட் தேர்வு 2022 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இதற்கான கட்ஆப் மதிப்பெண் குறைகிறது.
பொதுப்பிரிவினருக்கு 5 மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 10 மதிப்பெண்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 17 மதிப்பெண்களும், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 46 மதிப்பெண்களும் குறையும். மேலும், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கட்ஆப் மதிப்பெண்களும் குறையும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வெடி மருந்துடன் பிடிப்பட்ட இலங்கை தமிழர்கள் 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை