ETV Bharat / state

எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஸ்ட்ரே வேக்கன்சி கலந்தாய்வு; அகில இந்திய ஒதுக்கீட்டில் 2,140 இடம் ஒதுக்கீடு, 314 இடம் காலி! - அரசு மருத்துவக்கல்லூரி

Stray vacancy: மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த ஆண்டுகளை விட நடப்பாண்டில் அதிகளவில் காலியிடங்கள் இருக்கும் நிலை உள்ளது.

MBBS BDS Stray Vacancy counselling more vacancies in Tamil Nadu
எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஸ்ட்ரே வேகன்சி கலந்தாய்வு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2023, 6:24 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த 2 ஆண்டுகளை விட நடப்பாண்டில் அகில இந்திய ஒதுக்கீட்டில் சேராதவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என தெரிகிறது. மேலும், நீட் தேர்வில் மிகவும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களும் ஸ்ட்ரே வேக்கன்சியில் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இடங்களை தேர்வு செய்துள்ளனர். இளங்கலை நீட் தேர்வில் 40 பர்சன்ட் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் இடங்களை தேர்வு செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

அதேபோல், தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு மூலம் நடத்தப்படும் கலந்தாய்விலும் ஸ்ட்ரே வேக்கன்சி கலந்தாய்விற்கு பின்னரும், பல் மருத்துவப் படிப்பில் 100 இடங்கள் காலியாக உள்ளது. தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் காலியாக இருந்த இடங்களை அதிகளவில் மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான இடங்களை தேர்வு செய்வதற்கான தரவரிசைப் பட்டியலில் மாணவர்களின் தரவரிசை எண்ணில் 12 லட்சத்து 21 ஆயிரத்து 896வது இடத்தைப் பெற்ற மாணவர், எம்பிபிஎஸ் படிப்பினை ஸ்ரீபாலாஜி மருத்துவக்கல்லூரி குரோம்பேட்டையை பொதுப்பிரிவில் எடுத்துள்ளார். அதேபோல், அதிகளவில் காலியாக இருந்த ஸ்ரீசத்யசாய் மருத்துவக் கல்லூரியிலும் அதிகளவில் இடங்கள் நிரம்பி உள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வில் ஸ்ட்ரே வேக்கன்சியின்போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 12 இடங்களும், கோயம்புத்தூர், கே.கே.நகர் இஎஸ்ஐசி, அரியலூர், திண்டுக்கல், நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, ஓமந்தூரார், ராமநாதபுரம், திருப்பூர், புதுக்கோட்டை, கீழ்பாக்கம், சேலம், சிவகங்கை, வேலூர், திருச்சி, மதுரை, கடலூர் உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் ஒற்றை இலக்கத்தில் இடங்கள் காலியாக உள்ளது.

ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரியில் 61 இடங்களும், பாரத் மருத்துவக் கல்லூரியில் 64 இடங்களும், சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 27 இடங்களும், ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரியில் 205 இடங்களும், பாலாஜி மருத்துவக் கல்லூரியில் 53 இடங்களும், ஸ்ரீராமசந்திரா மருத்துவக் கல்லூரியில் 2 இடம், ஸ்ரீ லலிதாம்பிகை மருத்துவக் கல்லூரியில் 5 இடம், விஎம்கேவி மருத்துவக் கல்லூரியில் 16 இடம் என தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் 480 இடங்களுக்கு மேல் காலியாக உள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழுவால் நடத்தப்பட்டது. 4 சுற்றுகளாக நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கையில் 3 சுற்றுக் கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்யும் மாணவர்கள் வேறு கல்லூரியில் இடம் கிடைத்தால், அந்த கல்லூரிக்கு மாற அனுமதிக்கப்பட்டது.

இதனால் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களைத் தேர்வு செய்த மாணவர்கள் ஏற்கனவே சேர்ந்த கல்லூரியில் இருந்து வேறு கல்லூரிக்கு மாறிச் சென்றுள்ளனர். இறுதிச்சுற்றுக் கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்தவர்கள் கல்லூரியில் சேராவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும் என்பது விதியாக உள்ளது.

முன்னதாக, அகில இந்திய ஒதுக்கீட்டில் இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் 2,454 இடங்கள் காலியாக இருந்தன. அவற்றில் அரசு மருத்துவக்கல்லூரியை விட தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில்தான் மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் காலியிடம் அதிகளவில் தமிழ்நாட்டில் இருந்தது.

இந்த நிலையில் 27-ஆம் தேதி வெளியிட்டுள்ள முடிவுகளில் 2,140 இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 314 இடங்கள் காலியாக உள்ளது. இந்த இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் நாளைக்குள் கல்லூரியில் சேர வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்தாண்டுகளை காட்டிலும் நடப்பாண்டில் அதிகளவில் காலி இடங்கள் தமிழ்நாட்டில் இருக்கும் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: கடும் வெயிலிலும், மழையிலும் தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம்.. சம வேலைக்கு சம ஊதியம் கிடைக்குமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.