ETV Bharat / state

MBBS, BDS கட்ஆஃப் மதிப்பெண்கள் உயர்கிறது - கல்வியாளர் கருத்து

author img

By

Published : Jul 16, 2023, 6:08 PM IST

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப்படிப்பிற்கான கட்ஆஃப் மதிப்பெண்கள் கடந்தாண்டை விட உயரும் என கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.

mmbbs-bds-cutoff-marks-rise-academic-opinion
MBBS, BDS கட்ஆஃப் மதிப்பெண் உயர்கிறது - கல்வியாளர் கருத்து
MBBS, BDS கட்ஆஃப் மதிப்பெண்கள் உயர்கிறது - கல்வியாளர் கருத்து

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். அதில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 26 ஆயிரத்து 806 மாணவர்கள் விண்ணப்பம் செய்ததில், 25 ஆயிரத்து 856 மாணவர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 9 ஆயிரத்து 680 மாணவர்களும், 16 ஆயிரத்து 176 மாணவிகளும் ஆவார்கள். அதாவது வழக்கத்தைப் போல, மாணவர்களை விட மாணவிகளே அதிகம்.

அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் 6326 இடங்களும், அரசு பல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் 1768 பிடிஎஸ் இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதத்திற்கான ஒதுக்கீட்டில் அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுரிகளில் 473 MBBS இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 133 இடங்களும் உள்ளன. கடந்தாண்டைவிட நடப்பாண்டில் 606 மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 3042 மாணவர்கள் விண்ணப்பம் செய்ததில், 2993 விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவர்களில் 901 மாணவர்களும், 2092 மாணவிகளும் ஆவார்கள்.

நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள 1509 எம்பிபிஎஸ், 395 பிடிஎஸ் படிப்பிற்கான இடங்களுக்கு 13 ஆயிரத்து 394 விண்ணப்பம் பெறப்பட்டன. அவர்களில் 13 ஆயிரத்து 179 விண்ணப்பம் தகுதி உடையது. அதில் 4752 மாணவர்களும், 8427 மாணவிகளும் ஆவார்கள்.

இந்த நிலையில் மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கட்ஆஃப் மதிப்பெண்கள் கடந்தாண்டைவிட இவ்வாண்டு அதிகரிக்கும் என கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, ''தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் சேர்க்கைக்கான கட் ஆஃப் 25 மதிப்பெண்களுக்கு மேல் உயர்வதற்கு வாய்ப்புகள் அதிகம். இதற்குக் காரணம் கடந்தாண்டு 700 மதிப்பெண்களுக்கு மேல் 5 பேர் இருந்தனர். ஆனால், நடப்பாண்டில் 29 பேர் உள்ளனர். 650 மதிப்பெண்களுக்கு மேல் கடந்தாண்டு 199 பேர் இருந்தனர். நடப்பாண்டில் 399 பேர் உள்ளனர். 600 மதிப்பெண்களுக்கு மேல் கடந்தாண்டு 953 மாணவர்கள் இருந்தனர். ஆனால், நடப்பாண்டில் 1,538 மாணவர்கள் பெற்றுள்ளனர். 550 மதிப்பெண்களுக்கு மேல் கடந்த ஆண்டு 2,436 மாணவர்கள் பெற்ற நிலையில், நடப்பாண்டில் 3,628 பேர் உள்ளனர். 500 மதிப்பெண்களுக்கு மேல் கடந்தாண்டு 4,470 மாணவர்கள் இருந்த நிலையில் நடப்பாண்டில் 6,449 பேர் உள்ளனர். இதன் மூலம் கட் ஆஃப் அதிரிக்க வாய்ப்பு இருக்கிறது.

பொதுப்பிரிவினருக்கு (OC) 600 மதிப்பெண்களுக்கு மேலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 555 மதிப்பெண்களுக்கு மேலும், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம் மாணவர்களுக்கு 530 மதிப்பெண்களுக்கு மேலும், மிகவும் பிறப்படுத்தப்பட்டோருக்கு 528 மதிப்பெண்களுக்கு மேலும், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 465 மதிப்பெண்களுக்கு மேலும், ஆதிதிராவிடர் அருந்ததியர் பிரிவினருக்கு 420 மதிப்பெண்களுக்கு மேலும், பழங்குடியினருக்கு 390 மதிப்பெண்களுக்கும் மேலும் கட்ஆஃப் வரும் என கருதுகிறோம்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டிலும் மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். கடந்தாண்டு 500 மதிப்பெண்களுக்கு மேல் 2 மாணவர்கள் இருந்த நிலையில், நடப்பாண்டில் 15 மாணவர்கள் உள்ளனர். 450 மதிப்பெண்களுக்கு மேல் கடந்தாண்டு 7 பேர் இருந்த நிலையில், நடப்பாண்டில் 60 மாணவர்கள் உள்ளனர். 400 மதிப்பெண்களுக்கு மேல் கடந்தாண்டு 25 மாணவர்கள் இருந்த நிலையில், நடப்பாண்டில் 195 மாணவர்கள் உள்ளனர்.

கடந்தாண்டு 350 மதிப்பெண்களுக்கு மேல் 93 பேர் இருந்த நிலையில் நடப்பாண்டில் 534 பேர் உள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட்ஆஃப் மதிப்பெண் 50க்கு மேல் அதிகரிக்கும். தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் கலந்தாய்வு மிகவும் சவாலாக இருக்கப் போகிறது'' எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : மருத்துவ தரவரிசைப் பட்டியல் வெளியீடு - வரும் ஜூலை 25 முதல் MBBS கவுன்சிலிங்கிற்கு வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.