ETV Bharat / state

எம்பிபிஎஸ், பிடிஎஸ் 2ஆம் சுற்று கலந்தாய்வு அறிவிப்பு! - மருத்துவப் படிப்புகள்

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இரண்டாம் சுற்று கலந்தாய்வு வரும் 21ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2nd round counseling
2ஆம் சுற்று கலந்தாய்வு
author img

By

Published : Aug 19, 2023, 8:31 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் காலியாக உள்ள இடங்களுக்கு இரண்டாம் சுற்று கலந்தாய்வு வரும் 21ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கலந்தாய்வு மாணவகளுக்கான இறுதி ஒதுக்கீட்டானை ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்படும் என மருத்துவம் மற்றும் மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் சுற்று கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தரவரிசை பட்டியலில் ஒன்று முதல் 25 ஆயிரத்து 856 மாணவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டு பிரிவிற்கு தரவரிசை பட்டியலில் ஒன்று முதல் 13 ஆயிரத்து 179 பெற்ற மாணவர்களும் ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பதிவு செய்யலாம் என கூறப்பட்டு உள்ளது.

முதல் சுற்று கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்து கல்லூரியில் சேர்ந்த மாணவர்களும், இரண்டாம் சுற்று கலந்தாய்வில் வேறு கல்லூரியில் சேர்வதற்கு விரும்பினால் பதிவு செய்யலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இரண்டாம் சுற்று கலந்தாய்வில் எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 119 இடங்களும், என்ஆர்ஐ (NRI) மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் உட்பட 648 இடங்கள் காலியாக உள்ளதாகவு, ஒட்டுமொத்தமாக 767 இடங்கள் காலியாக இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் அமேதி தொகுதியில் களமிறங்கும் ராகுல் காந்தி? உ.பி தேர்தலில் வாகை சூடுவது யார்?

பிடிஎஸ் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் 85 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 818 இடங்கள் என மொத்தம் 903 காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கு 7 ஆயிரத்து 612 மாணவர்களுக்கும், தனியார் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கு ஆயிரத்து 475 மாணவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

2023 – 2024ஆம் கல்வி ஆண்டில் இளநிலை மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) ஆகிய படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவப் கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்களில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் ஜூன் 28ஆம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரையில் 40 ஆயிரத்து 200 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் 16ஆம் தேதி வெளியிடப்பட்டது.

2023 - 24 ஆம் ஆண்டிற்கான அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் படிப்பில் 6 ஆயிரத்து 326 இடங்களும், அரசு பல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் பிடிஎஸ் படிப்பில் ஆயிரத்து 768 இடங்களும் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் உள்ள இடங்களில் சேர்வதற்கு ஜூலை 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரையில் தரவரிசை எண் 1 முதல் 25,856 வரையிலும், நீட் தேர்வு மதிப்பெண் 720 முதல் 107 மதிப்பெண் வரை பெற்றவர்கள் விரும்பும் கல்லூரியை பதிவு செய்தனர்.

அதேபோல் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் உள்ள இடங்களில் சேர்வதற்கு ஜூலை 25ந் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரையில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான தரவரிசை எண் 1 முதல் 13,179 வரையிலும், நீட் தேர்வு மதிப்பெண் 720 முதல் 107 மதிப்பெண் வரை பெற்றவர்கள் பதிவு செய்தனர்.

இவர்களுக்கான இடங்கள் ஆகஸ்ட் 4, 5 ஆகிய தேதிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 6ந் தேதி கல்லூரியின் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 7ந் தேதி முதல் 11ந் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் அரசு ஒதுக்கீட்டில் 7,612 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 1,475 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "வடிவேலு காமெடியை விட I.N.D.I.A கூட்டணியில் திமுக இருப்பது பெரிய காமெடி" - அண்ணாமலை சாடல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.