1. பால் விலை குறைப்பு இன்று முதல் அமல்!
தமிழ்நாடு அரசு அறிவித்தபடி, ஆவின் பால் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
2. பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 94.31 ரூபாயாகவும், டீசல் லிட்டருக்கு 88.07 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
3. மேற்கு வங்கத்தில் முழு ஊரடங்கு அறிவிப்பு!
மேற்கு வங்கத்தில் கரோனா தொற்று அதிகளவில் பரவி வரும் நிலையில், இன்று முதல் மே 30ஆம் தேதி வரை மாநிலத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
4. அமராவதி அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு!
திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணையிலிருந்து முதல் போக பாசனத்துக்காக ஆயிரத்து 728 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் இன்று தண்ணீர் திறந்து விடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
5. நாமக்கல்லில் ஆன்லைன் மூலம் கரோனா விழிப்புணர்வு கருத்தரங்கம்!
கரோனா பரவல் நடவடிக்கை குறித்து ஆன்லைனில் இன்று மாலை நடத்தப்படும் விழிப்புணர்வு கருத்தரங்கில் பொதுமக்கள் பங்கேற்கலாம் என, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார்.