ETV Bharat / state

'உச்சபட்ச மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது' - அமைச்சர் செந்தில் பாலாஜி - அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டில் கடந்த காலங்களை விட 37 சதவீதம் அதிகமாக மின் உற்பத்தி செய்யப்படுகிறது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

'உச்சபட்ச மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது' - அமைச்சர் செந்தில் பாலாஜி

author img

By

Published : May 9, 2022, 9:52 PM IST

சென்னை: அண்ணாசாலையில் உள்ள மின் பகிர்மான தலைமை அலுவலகத்தில் மின் விநியோகம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

ஆய்வுக்கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "உச்சபட்ச மின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டு 16,000 மெகாவாட் மின்சாரத்திற்கு மேல் அதிகமாகவில்லை. அதேபோல் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளிலும் 16,000 மெகாவாட்டிற்கு மேல் அதிகமாகவில்லை.

ஆனால், கடந்த 17 நாட்கள் 16,000 மெகாவாட்டிற்கு மேல் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. 8.32 யூனிட்டாக உயர்ந்துள்ளது. பழுது ஏற்பட்ட இடங்களை உடனே சரிசெய்ய வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் தெரிவித்திருக்கிறோம். ஒரு வாரமாக 57 ஆயிரம் டன் நிலக்கரி வந்து கொண்டிருக்கிறது. 22 ரேக்கில் 72 ஆயிரம் டன் நிலக்கரி வரவேண்டும். ஆனால், இப்போது 15 ரேக்கில் தான் வந்து கொண்டிருக்கிறது. அதை அதிகப்படுத்த ஒன்றிய அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளோம்.

37 விழுக்காடு அதிகமாக மின் உற்பத்தி: குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மின்சாரம் பற்றி எதுவுமே தெரியாமல் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசிக் கொண்டிருக்கிறார். அதிகப்படியாக மின்சாரத்தை உற்பத்தி செய்து வெளிமாநிலங்களுக்கு யூனிட் ரூ.12 அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடுமையான மழை பெய்ததால் மின்தடை ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களைவிட 37 விழுக்காடு மின் உற்பத்தி அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. ஏப்ரல், மே மாதத்திற்கு முன் கூட்டியே 3,000 மெகாவாட் கொள்முதல் செய்யக் கோரப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் வட்டிக்கடன் உட்பட ரூ.2200 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.

1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு: ஒரு ஆண்டில் மொத்த கடன்சுமை 6 ஆயிரம் கோடி தான் வாங்கப்பட்டுள்ளது. சோலார் மின்சாரம் 222 மெகாவாட் தான் இருந்தது. தற்போது ஒரு ஆண்டில் 147 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 6200 மெகாவாட் அளவிற்கு சோலார் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். ஏற்கெனவே ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின்சாரம் இணைப்பு இலவசமாக கொடுக்கப்பட்டது. இந்த ஆண்டு திட்டத்தில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின்சாரம் இணைப்பு இலவசமாக கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 3.24 லட்சம் கோடி இணைப்புள்ளது. மின் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்றால் கட்டமைப்பையும் வலுப்படுத்த வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பொதுத்தேர்வு தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.