ETV Bharat / state

வீரப்பன் தேவையை தமிழ்நாடு மக்கள் இப்போது உணர்கின்றனர் - வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி!

கேஎன்ஆர் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள மாவீரன் பிள்ளை திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில், வீரப்பன் தேவையை தமிழக மக்கள் இப்போது உணர்கின்றனர் என வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கூறினார்.

Etv BharatThe people of Tamil Nadu now feel the need for Veerappan,said muthlakshmi
Etv Bharatவீரப்பன் தேவையை தமிழக மக்கள் இப்போது உணர்கின்றனர் - வீரப்பன் மனைவி முத்துலட்சுமி!
author img

By

Published : Mar 24, 2023, 11:32 AM IST

சென்னை: மாவீரன் பிள்ளை என்ற திரைப்படம் கேஎன்ஆர் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் சந்தனக்கடத்தல் வீரப்பனின் வாழ்வு குறித்து கூறும் படம் என்பதால், இதில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி நடித்துள்ளார்.

மாவீரன் பிள்ளை திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் கேஎன்ஆர் ராஜா, இயக்குநர் பேரரசு, வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, ''எனது மகள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். நானும் அவரது கணவரிடம் பேசிவிட்டு முடிவு எடுக்கச்சொன்னேன். அவரது கணவர் சரி என்ற பின் இப்படத்தில் அவர் நடித்துள்ளார். எனது கணவர் வீரப்பன் தமிழ் தேசியவாதியாக கர்நாடகத்தில் தமிழர்கள் துன்புறுத்தப்பட்ட போது அதனை எதிர்த்துப் போராடியவர். வீரப்பன் போல் ஒருவர் தேவை என்பதை தமிழக மக்கள் இப்போது உணர்கின்றனர், அவர் எப்போதும் சாதிக்கு துணை போகாதவர்'' என்றும் கூறினார்.

மேலும் அவர், தற்போதைய படிக்கின்ற இளைஞர்கள் மத்தியில் குடிப்பழக்கம் அதிகரித்து உள்ளது என்றும் மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பதால்தான் இளைஞர்கள் சீரழித்து வருகின்றனர் என்றும் கூறினார். ஒரு சமூக கருத்துள்ள படத்தை எடுத்துவிட்டு அதனை வெளியிட இயக்குநர் எவ்வளவு கஷ்டப்பட்டு வருகிறார் எனவும், சமூகத்தின் மீது அக்கறை கொண்டு எடுக்கப்படும் படங்களுக்கு எந்தமாதிரியான வரவேற்பு கிடைக்கிறது என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

வீரப்பன் இறந்த பின் முத்துலட்சுமி தான் அடைந்த துன்பத்தையும், அவரது மகள் விஜயலட்சுமி காட்டுக்குள் பிறந்து 11 மாதங்கள் அங்கு தான் வளர்க்கப்பட்டார் என்றும் கூறினார். மேலும் கணவரை இழந்த முத்துலட்சுமியை 4 வருடங்கள் கழித்து கர்நாடக போலீசார் வேண்டுமென்றே சிறையில் அடைத்ததாகவும் தான் சிறையில் பல கொடுமைகளுக்கு உள்ளாக்கப் பட்டதாகவும் கூறினார். இப்படிப்பட்ட சூழலிலும் என் குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து இந்த சமூகத்தில் நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் எனது கணவர் விட்டுச் சென்றதை ஒருதுளி அளவேனும் இந்த சமூகத்துக்கு செய்ய வேண்டும் என்று போராடி வருகிறேன் என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர், '' கர்நாடக வனத்துறையினர் தற்போது தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றுள்ளனர். எனது கணவர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா. அரசியல் அதிகாரம் படைத்தவர்களுக்கு இந்த சட்டம் பாய்வதில்லை. வீரப்பன் போல் ஒருவர் தேவை என்பதே தமிழக மக்கள் இப்போது உணர்கின்றனர். ஆனால் அன்று வீரப்பன் தேசத்துரோகி என்று அவரை விஷம் வைத்து இந்த அரசு கொலை செய்தது. அவரை சுட்டுக்கொன்றதாக காவல்துறை பொய் சொல்லி வருகிறது'' எனவும் தெரிவித்தார்.

''தற்போது வருகின்ற திரைப்படங்கள் இளைஞர்களை அழிக்கும் படங்களாகவே வருகின்றன. இயக்குனர்கள் சமூகத்துக்கு தேவையான படங்களை எடுங்க வேண்டும்'' என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க:நடிகர் அஜித்தின் தந்தை காலமானார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.