கோடை விடுமுறை நாட்களில் மெட்ரிக்குலேசன் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என மாணவர்களின் நலன் கருதி மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குநர் கண்ணப்பன் சுற்றரிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால், அரசின் உத்தரவை மீறி பல தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றன.
இதுகுறித்து மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் இயக்குநருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், எக்காரணம் கொண்டும் விடுமுறை நாட்களில் பள்ளிகளை நடத்தக்கூடாது. தொடர்ந்து விதிகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மீண்டும் மெட்ரிகுலேசன் பள்ளிகளின் இயக்குநர் கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.