கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2019-20 கல்வியாண்டில் பள்ளிகளில் சேர ஏப்ரல் 22ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரையில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இச்சட்டததின் கீழ் இந்த ஆண்டு பள்ளிகளில் சுமார் ஒரு லட்சத்து 22 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சேர்வதற்கு ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 989 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில்,
"கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பத்தில் தகுதியானவற்றை ஆய்வு செய்து தரம் பிரிக்க வேண்டும். கல்வி தகவல் மேலாண்மை முகமை (இஎம்ஐஎஸ்) இணையத்தளத்தில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். இந்த பணியை வரும் 28ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். மாணவர் சேர்க்கை முடிந்த பிறகு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவால் சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்படும். இதில் தவறு ஏதேனும் இருந்தால் சேர்க்கை ரத்து செய்யப்படும். ஆவணங்களை ஆய்வு செய்யும் போது அலுவலர்கள் தவறு ஏதுவுமின்றி கவனமுடன் செயல்பட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளது.
தனியார் பள்ளியில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு
மாணவர்களின் சான்றிதழ் சரிபார்க்க உத்தரவு
சென்னை,
தனியார் பள்ளிகளில் உள்ள இடங்களில் 25 சதவீத இடங்களில் சேர்வதற்கு விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆன்லைனில் சரிபார்க்க வேண்டும் என மெட்ரிக்குலேசன் இயக்கம் அறிவித்துள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் திட்டத்தின் கீழ் 2019-20 ம் கல்வியாண்டில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கைக்கு ஏப்ரல் 22 ந் தேதி முதல் 18ந் தேதி வரையில் விண்ணப்பித்தனர்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 1 லட்சத்து 22 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கைக்கு இடம் உள்ளது. இந்த இடங்களில் சேர்வதற்கு 1,20,989 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் 5,791,திருவள்ளுர் 5,994, கடலூர் 5,272, விழுப்புரம் 6,814,வேலூர் 8,776, திருவண்ணாமலை 5,234,சேலம் 7,153,நாமக்கல் 2,434,தருமபுரி 4,560, ஈரோடு 2,316,கோயம்புத்தூர் 3,966,நீலகிரி 465,தஞ்சாவூர் 2,311,திருச்சிராப்பள்ளி 4,107,கரூர் 1,321,பெரம்பலூர் 1,100, புதுக்கோட்டை 2,748, மதுரை 7,625,தேனி 2,144, திண்டுக்கல் 3,144,ராமநாதபுரம் 1,974,விருதுநகர் 2,340, சிவகங்கை 2,424, திருநெல்வேலி 4,599, தூத்துக்குடி 2,518, கன்னியாகுமரி 1804, சென்னை 7,068, கிருஷ்ணகிரி 3,047, அரியலூர் 1,169,திருப்பூர் 3,513 என 1,20,989 விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மெட்ரிக்குலேசன் இயக்கம் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள உத்தரவில், இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பத்தில் தகுதியானவற்றை ஆய்வு செய்து தரம் பிரிக்க வேண்டும்.
மாணவர்களின் பிறப்பு சான்றிதழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவின் கீழ் விண்ணப்பித்திருந்தால் அது குறித்தும், சிறப்பு பிரிவினரில் விண்ணப்பித்தால் அதன் அடிப்படையிலும், நலிவடைந்த பிரிவினருக்கான ஒதுக்கீட்டிற்கு ஆண்டு வருமானம் 1 லட்சத்து 50ஆயிரம் முதல் 2 லட்சம் வருமான சான்றிதழ் அளித்திருக்க வேண்டும்.
அதேபோல் அவர்களுக்கான இருப்பிட சான்றுக்கு உரிய ஆவணத்தையும் சரிபார்க்க வேண்டும்.
கல்வித்தகவல் மேலாண்மை முகமை(இஎம்ஐஎஸ்) இணையத்தளத்தில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். அதனை உறுதிப்படுத்த வேண்டும். இந்த பணியை வரும் 28 ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
மாணவர் சேர்க்கை முடிந்த பிறகு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவால் பெற்றோர்கள் அளித்த சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்படும். இதில் தவறு ஏதேனும் இருந்தால் சேர்க்கையினை ரத்து செய்யப்படும். ஆவணங்களை ஆய்வு செய்யும் போது அலுவலர்கள் தவறு ஏதுமின்றி கவனமுடன் செயல்பட வேண்டும் என அதில் கூறியுள்ளார்.