ETV Bharat / state

பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசிய செயற்பொறியாளர் - மாதர் சங்கத்தினர் கண்டனம்

author img

By

Published : Oct 22, 2020, 3:10 PM IST

சென்னை: திருவொற்றியூரில் பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசிய உதவி செயற்பொறியாளரை கண்டித்து, மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Mathar sangam protest
Mathar sangam protest

சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில் பணியாற்றி வரும் உதவி செயற்பொறியாளர் ஜெயகுமார் தனக்கு கீழே பணிபுரியும் பெண் தூய்மைப் பணியாளர்களை ஆபாசமாக பேசியுள்ளார்.

இதனால் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி திருவொற்றியூரைச் சேர்ந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் எஸ். பாக்கியம் தலைமையில் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் மாதர் சங்க மாவட்ட செயலாளர் பாக்கியம் கூறுகையில், “திருவொற்றியூர் 1ஆவது மண்டலத்தில் பணியாற்றும் பெண்களை, உதவி செயற்பொறியாளர் ஆபாசமாக பேசி வருகிறார். அவருக்கு கீழ் பணியாற்றும் பெண் குறித்து செல்போனில் உதவி செயற்பொறியாளர் பேசிய ஆடியோவும் வெளியாகி உள்ளது.

எனவே உதவி செயற்பொறியாளர் மீது துறை ரீதியாகவும், காவல்துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், ஆணையரிடம் புகார் அளிப்போம்” என தெரிவித்தார்.

மாதர் சங்கத்தினரின் இந்த ஆர்ப்பாட்டத்தால் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து, சம்பவ இடத்தில் காவல்துறை உதவி ஆணையர் ஆனந்தகுமார் தலைமையில், முன்னெச்சரிக்கையாக காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.