ETV Bharat / state

தோழர்கள் கொண்டாடிய நவம்பர் புரட்சி தினம்! - The November Revolution is a day to commemorate the Soviet Revolution

சென்னை: நவம்பர் புரட்சி தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் கொடி ஏற்றிக் கொண்டாடப்பட்டது.

நவம்பர் புரட்சி தினம்
author img

By

Published : Nov 7, 2019, 7:25 PM IST

சோவியத் புரட்சியை நினைவுகூரும் வகையில், நவம்பர் 7ஆம் தேதியன்று உலகெங்கும் ’நவம்பர் புரட்சி தினம்’ கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில் இன்று, 102ஆவது நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் சம்பத் செங்கொடியை ஏற்றி, இனிப்புகள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மத்தியக்குழு உறுப்பினர் சம்பத், 'மத்தியில் ஃபாசிச பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. உலகில் உள்ள ஃபாசிச ஆட்சிகளை வீழ்த்தி முறியடித்த பெருமை சோஷலிச நவம்பர் புரட்சியையேச் சேரும். இந்த ஃபாசிச பாஜக ஆட்சிக்கு எதிராகப் போராடி வரும், இடதுசாரி இயக்கங்கள் மீதும் போர் முனைத் தாக்குதல் நடைபெறுகிறது. அதனையும் கொள்கை வழி நின்று முறியடிப்போம். இன்றைய நவம்பர் புரட்சி தினத்தை நாடு முழுவதும் இடதுசாரி இயக்கங்கள், ஜனநாயக அமைப்புகள் கொண்டாடி வருகின்றனர்’ எனத் தெரிவித்தார்.

இதேபோல் நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகத்திலும் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் இரா.நல்லக்கண்ணு, தா.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தா.பாண்டியன், 'மகாராஷ்டிரா, ஹரியானா மாநில தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றாலும், அவர்கள் ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள் கிடைக்கவில்லை. அதேபோல், கேரளா, குஜராத் போன்ற மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் பாஜக வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. மோடி அலை அவரைதான் சூழ்ந்து அடித்துள்ளது. கம்யூனிஸ்ட் இல்லாத உலகம் இல்லை. இந்த புரட்சி தினத்தில் மோடியின் மோசடி வேலைகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தொடர்ந்து எதிர்த்து நிற்கும் என சபதம் ஏற்கிறது’ எனத் தெரிவித்தார்.

தோழர்கள் கொண்டாடிய நவம்பர் புரட்சி தினம்

இதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு கூறுகையில், ’வள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர். அவருக்கு மதச் சாயம் பூசுவது தவறு' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அயோத்தியா வழக்கு: அரசியல் கட்சிகளுடன் ஆர்எஸ்எஸ் ஆலோசனை!

Intro:

Body:Visuals

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.