சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நேற்று (செப்.25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என்று பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது மனுஷ்யபுத்திரன் பாலசுப்பிரமணியத்துக்கு இரங்கல் தெரிவித்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
எதற்கு கடைசி வீடியோக்களை
காட்டுகிறீர்கள்?
எதற்கு கடைசி புகைப்படங்களை
வெளியிடுகிறீர்கள்?
எதற்கு கடைசிச் செய்திகளை
மேற்கோள் காட்டுகிறீர்கள்?
எதற்கு கடைசிச் கச்சேரியை
மறுபடி ஒளிபரப்புகிறீர்கள்?
நான் என் நினைவுகளின்
நறுமணங்களை இழக்கிறேன்
சிலவற்றிற்கு கடைசி என்ற ஒன்றில்லை
ஒருவேளை இருந்தால் அது உலகின் கடைசி நாளில் இருக்கலாம்
என இரங்கல் தெரிவித்துள்ளார்.
எஸ்பிபி மறைவிற்கு மனுஷ்யபுத்திரன் இரங்கல்
சென்னை: எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவிற்கு மனுஷ்யபுத்திரன் இரங்கல் கவிதை எழுதியுள்ளார்.