ETV Bharat / state

‘திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார் என்றால் தாய் திருவிக’ - ஸ்டாலின் புகழாரம் - congress

சென்னை: திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார் என்றால் தாய் திருவிக என்று திமுக தலைவர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஸ்டாலின்
author img

By

Published : Jul 24, 2019, 10:37 AM IST

சென்னை பாரிமுனையில் திருவிக குறித்து மணவழகர் மன்றத்தின் 63ஆம் ஆண்டு முத்தமிழ் விழா நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், கருணாநிதி இல்லாதது நாட்டிற்கும், தமிழுக்கும் பெரிய இழப்பு. திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார் என்றால், தாயாக திருவிக விளங்கினார். நடந்து முடிந்த தேர்தலில் திமுக மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றதாகவும், மிட்டாய் கொடுத்து வெற்றி பெற்றதாகவும் சட்டப்பேரவையில் சொன்னார்கள். அது மக்களை கொச்சைப்படுத்தும் செயலாகவே கருதப்படும்.

மணவழகர் மன்ற விழா

தமிழுக்காக, தமிழருக்காக தொடர்ந்து நாங்கள் போராடி வருகிறோம். தபால் துறை தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்ட நிலையில் அந்த தேர்வையே ரத்து செய்ய வைத்துள்ளோம். தேசிய கல்வி கொள்கை குறித்த திமுகவின் கருத்துகளை விரைவில், மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம். தற்போது மக்கள் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கே போராட வேண்டிய நிலை உள்ளது. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்காகவும் குரல் கொடுத்து வருகின்றனர் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில், தமிழகத்தில் எத்தனை தலைவர்கள் இருந்தாலும் திரு வி.க முத்திரை பதிக்கக் கூடிய சிறந்த தலைவர். அவர் இறுதி வரை காங்கிரஸ் கட்சியை சார்ந்திருந்தாலும் பல நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் குறைகளை சுட்டிக்காட்டியுள்ளார். சாதியை, மதத்தை மையப்படுத்திதான் இன்றைய ஆட்சியாளர்கள் இந்தியாவை அடிமையாக்கி வருகின்றனர். இந்நாளில் மதம் ஆட்சியை பிடிக்க ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் அவர்களால் நிறைவேற்ற முடியாத பல சட்ட திருத்தங்களை இந்த 20 நாட்களில் நிறைவேற்றி உள்ளனர். இரண்டாம் சுதந்திர போரை தமிழகத்திலும், இந்தியாவிலும் நடத்தும் நிலை உருவாகியுள்ளது எனவும் அவர் கூறினார்.

Intro:Body:சென்னை பாரிமுனையில் மணவழகர் மன்றத்தின் 63ஆம் ஆண்டு முத்தமிழ் விழா நடைபெற்றது. அதில்
திமுக தலைவர் ஸ்டாலின், உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆர் லட்சுமணன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி, சிபிஎம் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்வில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், கருணாநிதி இல்லாதது நாட்டிற்கும், தமிழுக்கும் பெரிய இழப்பு
திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார் என்றால், தாய் - திரு.வி.க
நடந்து முடிந்த தேர்தலில் திமுக மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றதாக , மிட்டாய் கொடுத்து வெற்றி பெற்றதாக சட்டப்பேரவையில் சொன்னார்கள் அது மக்களை கொச்சைப்படுத்துவதாகும்.
தமிழுக்காக , தமிழருக்காக தொடர்ந்து போராடி வருகிறோம். ஹிந்தி கட்டாயம் இல்லை என்று சொல்கிற நிலை இன்று உருவாகியுள்ளது.
தபால் துறை தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்ட நிலையில் அந்த தேர்வையே ரத்து செய்ய வைத்துள்ளோம். தேசிய கல்வி கொள்கை குறித்த திமுகவின் கருத்துக்கள் விரைவில், மத்திய அரசிடம் சமர்பிப்போம். அடிபடை ஜனநாயக உரிமைகளுக்கே போராட வேண்டிய நிலை உள்ளது. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்காகவும் குரல் கொடுக்கின்றனர் என பேசினார்.

இதற்கு முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில், தமிழகத்தை எத்தனை தலைவர்கள் இருந்தாலும் திரு.வி.கா முத்திரை பதிக்க கூடிய சிறந்த தலைவர். இறுதி வரை காங்கிரஸ் கட்சியை சார்ந்தாலும் பல நேரத்தில் காங்கிரஸ் கட்சியை கூட சூட்டி காட்டியுள்ளார்.
சாதியை, மதத்தை பயன்படுத்தி தான் இன்றைய ஆட்சியாளர்கள் இந்தியாவை அடிமையாக்கி வருகின்றனர். மதம் ஆட்சியை பிடிக்க ஒரு கருவியாக பயன்படுத்தபடுகிறது.
கடந்த 5 ஆண்டுகளின் அவர்களால் நிறைவேற்ற முடியாத பல சட்ட திருத்தங்களை இந்த 20 நாட்களில் நிறைவேற்றி உள்ளனர். இரண்டாம் சுதந்திர போரை தமிழகத்திலும், இந்தியாவிலும் நடத்தும் நிலை உருவாகியுள்ளது என கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.