ETV Bharat / state

கடன் மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த மேலாளர் - உடைமைகளை முடக்கிய அமலாக்கத்துறை! - Manager involved in debt fraud

சென்னை : வங்கி கடன் மோசடியில் குற்றச்சாட்டப்பட்ட கொடைக்கானல் இந்தியன் வங்கி கிளையின் முன்னாள் மேலாளரின் 1.63 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

கடன் மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த மேலாளர் - உடைமைகளை முடக்கிய அமலாக்கத்துறை!

author img

By

Published : Aug 20, 2020, 9:47 PM IST

கடந்த 2012 முதல் 2013 ஆம் ஆண்டு வரை கொடைக்கானலில் உள்ள இந்தியன் வங்கி மேலாளராகப் பணிபுரிந்த பாண்டியராஜன் என்பவர் 2.85 கோடி ரூபாய் கடன் வழங்கிய விவகாரத்தில் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இந்தியன் வங்கி கொடுத்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

மோசடி செய்து வீட்டுக் கடன், தொழில் கடன் என போலியான நிறுவனங்களுக்கும் வழங்கியது தெரியவந்துள்ளது. எவ்விதமான பிணையும் வழங்காமல், உரிய பத்திரங்களை கொடுக்காமல் வாங்கப்பட்ட அந்த வீட்டுக் கடன்களையும் பயன்படுத்தி, பல சொத்துக்கள் வாங்கியதும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் இருந்த காரணத்தினால் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.

அந்த வகையில், பாண்டியராஜன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதை அடுத்து, அவரது 22 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இதன் மதிப்பு 1.63 கோடி ரூபாயென மதிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கொடைக்கானலில் 15 ஏக்கர் விவசாய நிலம் மற்றும்12 ஏக்கர் நிலம், 18 ஆயிரம் சதுரஅடி கொண்ட பிளாட், மதுரையில் 3000 சதுர அடியில் கட்டப்பட்ட வீடு உள்ளிட்ட சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.