ETV Bharat / state

ஓடும் ரயிலில் வெள்ளி வியாபாரியிடம் கைவரிசை: 2 மாதங்களுக்கு பின் சிக்கிய கொள்ளையர்.. தனிப்படை போலீசார் அதிரடி..! - தனிப்படை போலீசார்

Train Robbery: ஓடும் ரயிலில் வெள்ளி வியாபாரியிடம், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த நபரை, தனிப்படை போலீசார் 2 மாதங்களுக்குப் பிறகு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஓடும் ரயிலில் கொள்ளையடித்த நபரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2023, 6:17 PM IST

சென்னை: ஓடும் ரயிலில் வெள்ளி வியாபாரியிடம், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த நபரை, தனிப்படை போலீசார் 2 மாதங்களுக்கு பிறகு கைது செய்து உள்ளனர். சென்னை புரசைவாக்கம் வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 44).

வெள்ளி வியாபாரியான இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி இரவு, பெங்களூருவில் வெள்ளி பொருட்களை வாங்கி உள்ளார். பின்னர் வாங்கிய வெள்ளி பொருட்களுடன், சென்னைக்கு அரக்கோணம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்த படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்துள்ளார்.

அப்போது அவரிடம் இருந்து 4 லட்ச ரூபாய் மதிப்பிலான 5 கிலோ 300 கிராம் எடை கொண்ட வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.13 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வெள்ளி வியாபாரி சதீஷ்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சதீஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்க ரயில்வே காவல்துறை கூடுதல் இயக்குநர் வனிதா உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: “கூட்டத்தில் குழப்பம் விளைவிக்க நான் ஒன்றும் அண்ணாமலை இல்லை” - மன்சூர் அலிகான்

இதனைத் தொடர்ந்து, கடந்த 2 மாதங்களாக ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த ஜெகன்குமார் (வயது 32) இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

உடனடியாக, தனிப்படை போலீசார் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி ஜெகன்குமாரை சுற்றிவளைத்துப் பிடித்தனர். விசாரணையில், ஜெகன் வெள்ளிப் பொருட்களையும் 13 லட்ச ரூபாய் பணத்தையும் அரக்கோணம் ஏ.பி.எம் சர்ச் பகுதியில் உள்ள தனது வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார். அதையடுத்து, வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை போலீசார் மீட்டனர். பின்னர், ஜெகன்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஜெயலலிதா சொத்து விபரம்; 2 ஆண்டுகளுக்குப் பிறகு பதிலளித்த ஆர்டிஐ.. அதிர்ச்சியில் வழக்கறிஞர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.