ETV Bharat / state

ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் இளைஞர் தற்கொலை முயற்சி - ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் இளைஞர் தற்கொலை முயற்சி

சென்னை ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவர் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

நபர் தற்கொலை முயற்சி
நபர் தற்கொலை முயற்சி
author img

By

Published : Dec 3, 2021, 6:17 PM IST

சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள டி.டி கிருஷ்ணமாச்சாரி மேம்பாலம் வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதில் அவருக்கு கால்முறிவு ஏற்பட்டது. போக்குவரத்து காவலர்கள் உதவியுடன் பொதுமக்கள் அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மயிலாப்பூர் காவல் துறையினர் அந்த நபர் வந்த வாகன எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர் ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சேர்ந்த விஜய் கிருஷ்ணன் (43) என்பதும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

நபர் தற்கொலை முயற்சி

இதையடுத்து தற்கொலை முயற்சிக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விஜய் கிருஷ்ணனின் குடும்பத்தினரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்த முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.