ETV Bharat / state

ஆன்லைன் ரம்மி: லட்சக்கணக்கில் பணத்தை இழந்தவர் தற்கொலை - Man loses money in online rummy commits suicide in chennai

காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தினேஷ் செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கமுடையவர் என்பதும், கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் இழந்ததால் மனமுடைந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தவர் தற்கொலை

author img

By

Published : Jan 10, 2022, 2:55 PM IST

சென்னை: ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் எனப் பிரபலங்கள் நடிக்கும் விளம்பரங்களைப் பார்த்து ஏராளமானோர் சூதாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் காரணமாகப் பலர் பணத்தை இழந்து பெரும் கடனாளியாகி தற்கொலைக்கும் தள்ளப்படுகின்றனர். சமீப நாள்களாக ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன.

அதனால் பல மாநில அரசுகள் அதனைத் தடைசெய்ய மசோதா நிறைவேற்றிவருகின்றன. தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களைச் சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்ய சட்டம் இயற்றப்பட்டதால் பலரும் மகிழ்ச்சியும், மன நிறைவும் அடைந்த நிலையில் இருக்கிறார்கள்.

ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டம்

சென்னை கோயம்பேடு சீமாத்தமன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் (41). இவர் கோயம்பேடு சின்மயா நகரில் குளோபல் நெட் புரௌசிங் சென்டர் வைத்து நடத்திவருகிறார். இவருக்கு மனைவி, இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு (ஜனவரி 9) மனைவி, பிள்ளைகள் வீட்டின் படுக்கையறையில் சென்று உறங்கியபோது தினேஷ் ஹாலிலேயே உறங்கி உள்ளார்.

ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தவர் தற்கொலை
ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தவர் தற்கொலை

அதன்பின்னர் இன்று (ஜனவரி 10) அதிகாலை அவரது மனைவி அறையிலிருந்து வெளியே வந்தபோது தினேஷ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தற்கொலை தீர்வல்ல
தற்கொலை தீர்வல்ல

இதனையடுத்து உடனடியாக கோயம்பேடு காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். புகாரின்பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அதன்பின்னர் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தினேஷ் செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கமுடையவர் என்பதும், கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் இழந்ததால் மனமுடைந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

கடனைத் திருப்பித் தர முடியாததால் தினேஷ் தற்கொலை செய்துகொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து தினேஷின் செல்போனைக் கைப்பற்றிய காவல் துறையினர் சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

ஏற்கனவே கடந்த வாரத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் துரைப்பாக்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மற்றுமொரு நபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Online Gambling: தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படும்.. ஸ்டாலின் உறுதி...

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.