ETV Bharat / state

அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட தொழிலாளி! - போலீசார் தீவிர விசாரணை

Murder near Ambattur Railway station: அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே இருக்கும் டாஸ்மாக் கடை அருகே தொழிலாளி ஒருவர் மது பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே மர்மமான முறையில் கொலை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2023, 2:28 PM IST

சென்னை: அம்பத்தூர் அடுத்த சம்தாரியா நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (43). இவர் பட்டரவாக்கம் பகுதியில் தனியார் இரும்பு ஆலையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு 10.45 மணி அளவில் தனது பணியை முடித்து விட்டு வீடு திரும்பிய அவர், வீட்டில் இருந்து அரை சவரன் நகை எடுத்துச் சென்றுள்ளார்.

அது குடிப்பதற்காகவோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காகவோ எடுத்துச் சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே மர்மமான முறையில் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்து உள்ளார்.

இது குறித்து அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின்னர், விஜயகுமாரின் உடலைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூராய்விற்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், விஜயகுமாரின் கழுத்தில் மது பாட்டிலை உடைத்து, குத்தி கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளும் போலீசார், மது போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திருச்சியில் பொது வெளியில் பட்டா கத்தியுடன் சுற்றித் திரிந்த இளைஞர் கைது.. உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ள போலீசார் அறிவுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.