சென்னை: ஓஎம்ஆர் சாலை கந்தன்சாவடி- கொட்டிவாக்கம் இடையே மெட்ரோ ரயில் திட்டத்திற்காக வேலைகள் நடைபெற்று வருகிறது. சாலையின் நடுவே பாதுகாப்பிற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இதற்காக சுமார் 9 அடி பள்ளம் தோண்டப்பட்டு அதில் தண்ணீர் நிறைந்து இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக வேலை நடைபெறாமல் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அந்த வழியாக செக்கியூரிட்டியான அஜய் குமார்கேஷி என்பவர் சென்ற போது, அங்கு தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் இறந்த ஆண் ஒருவரின் உடல் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக தரமணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற உதவி ஆய்வாளர் வேணுகோபால் உள்ளிட்ட காவல்துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்து கிடந்த நபர் யார் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது யாராவது கொலை செய்து வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தெருக்கூத்து பார்த்துவிட்டு வந்தவரை கொலை செய்த விவசாயி!