ETV Bharat / state

கார் கண்ணாடி உடைப்பு... தட்டிக்கேட்ட போலீஸ் மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

சென்னையில் கார் கண்ணாடியை உடைத்ததைத் தட்டிக்கேட்ட காவலரை கட்டையால் தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 8, 2023, 3:26 PM IST

சென்னை: மேற்கு மாம்பலம் சக்கரபாணி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர், சிந்து(37). இவரது மகள் கே.கே. நகரில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (பிப்.7) மாலை தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக சிந்து காரில் சென்று கே.கே.நகர் 4-வது செக்டர் 20வது தெருவில் காரை நிறுத்திவிட்டு மகளை அழைக்க சிந்து பள்ளிக்குச் சென்றுள்ளார்.

பின்னர் மகளை அழைத்துக்கொண்டு காரை எடுக்க வந்தபோது, வீட்டு உரிமையாளர் சிந்துவின் காரின் முன்பக்க கண்ணாடியை கட்டையால் அடித்து உடைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு காரை ஏன் வீட்டு வாசலில் நிறுத்தி இருக்கீங்க? என கேட்டு, சிந்துவை தகாத வார்த்தையால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

சிந்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த கே.கே.நகர் காவல் நிலைய காவலர் விஜயராஜ், இதுகுறித்து கேட்டபோது மீண்டும் அந்த நபர் காவலரை ஆபாசமாகப் பேசி கட்டையால் தாக்கியதோடு கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதனால் உடனடியாக அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கார் கண்ணாடியை உடைத்ததோடு போலீசாரை தாக்கிய அந்நபர் அரவிந்த்(40) என்பதும், இவர் ஏற்கனவே முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இவர் மீது ஆபாசமாகப் பேசுதல், கொலை மிரட்டல், பணி செய்யவிடாமல் தடுத்தல் உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கொடநாடு வழக்கு: 6 பேரிடம் சுமார் 3 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.