சென்னை காரப்பக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் அப்பாவிபோல புகுந்து திருடும் பழக்கம் உடைய இவர், கடந்த ஆறாம் தேதி கே.கே.நகர் ஐயப்பன் கோயிலில் சிலர் இருமுடிகட்டி சபரிமலைக்குப் புறப்படுவதை அறிந்து ஐயப்பன் சாமிக்கு மாலை அணிந்தவர்போல் வேடமிட்டு அங்கு சென்றுள்ளார்.
அதன்பின், கோயிலிலிருந்த பிரதீபா என்பவரின் கைப்பையைத் திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து பிரதீபா கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். மேலும் கைப்பையில் தனது செல்போன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், கோயிலிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது செந்தில்குமார் கைப்பையைத் திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
இதையடுத்து, பிரதீபாவின் செல்போன் சிக்னலை வைத்து காவல் துறையினர் செந்தில்குமாரை பின்தொடர்ந்து நெசப்பக்கம் அருகே மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகின. கடந்த மாதம் மேற்கு மாம்பலத்திலுள்ள திருமண மண்டபத்தில் மொய்ப் பணம், தங்க நகைகள் ஆகியவற்றைத் திருடியதும், ஏற்கனவே தனது மூன்றாவது மனைவியை எரித்துக்கொன்ற வழக்கில் மதுரவாயல் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதும் தெரியவந்தது.
மேலும் நெசபாகத்திலுள்ள ஒரு கோயில் உண்டியலை திருடியது, பாண்டி பஜாரில் செல்போன் திருடியது என பல திருட்டு வழக்குகளில் இவர் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.
இதையும் படிங்க:
மருத்துவமனையில் பழக்கம்... 1 வாரத்தில் தனியாக அழைத்து வன்கொடுமை... பாய்ந்த போக்சோ!