ETV Bharat / state

விமானத்தில் சுறா மீன்களின் வால், செதில் கடத்தியவர் கைது! - The tail of the sura fish on the plane was arrested

சென்னை: சிங்கப்பூர் செல்லும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சுறா மீன்களின் வால், செதில்கள் ஆகியவற்றை கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

smuggling shark scales
சூரா மீன்களின் வால், செதில்
author img

By

Published : Nov 26, 2019, 7:08 PM IST

சென்னை விமான நிலையத்தில் திருச்சியைச் சேர்ந்த தா்பாா் லத்தீப் (60) என்பவர் சுறா மீன்களின் வால்கள், செதில்கள் ஆகியவற்றை சிங்கப்பூருக்குச் செல்லும் ஏா் இந்தியா விமானத்தில் கடத்த முயன்றபோது சுங்கத்துறை அலுவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடமிருந்து, ரூ. 8 லட்சம் மதிப்புடைய 14 கிலோ சுறா மீன்களின் செதில்கள், வால்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவற்றைக் கொண்டு ஸ்டாா் ஓட்டல்களில் தயாரிக்கும் சூப், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பதால் சீனாவில் மிகவும் பிரபலமானது. ஆனால், நமது நாட்டில் அழிந்துவரும் இனம் என்பதால், மத்திய அரசு இதை வெளிநாடுகளுக்குக் கடத்த தடை விதித்துள்ளது. தற்போது, மத்திய வனக்குற்றப்பிரிவு அலுவலர்களுடன் சுங்கத்துறை அலுவலர்கள் இணைந்து, கைது செய்யப்பட்ட நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: விமானத்தில் ஹெராயின் கடத்தி வந்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

Intro:சென்னையிலிருந்து சிங்கப்பூா் செல்ல இருந்த ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சூரா மீன்களின் வால்கள் மற்றும் செதில்களை கடத்தமுயன்ற திருச்சியை சோ்ந்த தா்பாா் லத்தீப் (60) என்ற பயணியை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினா் கைது செய்தனா்.Body:சென்னையிலிருந்து சிங்கப்பூா் செல்ல இருந்த ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சுறா மீன்களின் வால்கள் மற்றும் செதில்களை கடத்தமுயன்ற திருச்சியை சோ்ந்த தா்பாா் லத்தீப் (60) என்ற பயணியை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினா் கைது செய்தனா்.
அவரிடமிருந்து ரூ. 8 லட்சம் மதிப்புடைய 14 கிலோ சுறா மீன்களின் செதில்கள் மற்றும் வால்களை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.
இவைகளை கொண்டு சூப் தயாரித்து, ஸ்டாா் ஓட்டல்களில் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படும்.இந்த வகையான சூப் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பதால் சீனாவில் இந்த வகை சூப் பிரபலமானது. இந்த மீன்கள் நமது நாட்டில் அழிந்துவரும் ஒரு இனம் என்பதால்,
மத்திய அரசு இதை வெளிநாடுகளுக்கு கடத்த தடைவிதித்துள்ளது.
எனவே கைது செய்யப்பட்டுள்ள பயணியை சுங்கத்துறையினா் மேலும் தீவிரமாக விசாரிக்கின்றனா்.
அதோடு இது கடல்வனத்துறை சம்பந்தப்பட்டவை என்பதால் சென்னையில் உள்ள மத்திய வனக்குற்றப்பிரிவுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவா்களும் விசாரணை நடத்துகின்றனா்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.