ETV Bharat / state

சென்னையில் 18 ரேசன் அரிசி மூட்டைகள் கடத்த முயற்சி - ஒருவர் கைது

சென்னை: அயனாவரம் அருகே 18 ரேசன் அரிசி மூட்டைகளைக் கடத்த முயன்ற அமித் என்பவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

author img

By

Published : Feb 10, 2020, 4:13 PM IST

அரிசி மூட்டைகள் கடத்த முயற்சி
அரிசி மூட்டைகள் கடத்த முயற்சி

சென்னை அயனாவரம் வி.பி. காலனி விரிவாக்கம் சந்திப்பில் அரசு நியாய விலைக்கடை உள்ளது. இந்தக் கடையிலிருந்து டாட்டா ஏஸ் வாகனத்தில் இரண்டு பேர் ரேசன் அரசி மூட்டைகளை வைத்துக்கொண்டிருந்தனர். அப்போது இரவு பணி முடித்துச் சென்ற காவலர் கருப்பசாமி சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரித்தார்.

உடனே வாகனத்தின் ஓட்டுநர் கணேசன் என்பவர் அங்கிருந்து ஓடிவிட்டார். இதனைத் தொடர்ந்து மற்றொரு நபரான வண்டியின் உரிமையாளர் அமித்தை காவலர் கருப்பசாமி கைது செய்து வாகனத்தையும் பறிமுதல் செய்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் வாகன உரிமையாளர் அமித்திடம் விசாரணை செய்ததில், அரிசி மூட்டைகளை செனாய் நகர் பகுதியில் உள்ள மாடு உரிமையாளர்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்ய எடுத்து செல்ல இருந்ததாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து வாகனத்தில் இருந்த ரேசன் அரிசியை சோதனையிட்டதில் 900 கிலோ மதிப்புள்ள 18 ரேசன் அரசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அமித் மீது உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தப்பியோடிய அவரது ஓட்டுநரான கணேசனை தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 09.02.20

18 முட்டைகள் ரேசன் அரிசியை கடத்த முயன்றவர் கைது; உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் அதிரடி...

இன்று காலை அயனாவரம் ரோடு, வி.பி.காலனி விரிவாக்கம் சந்திப்பில் உள்ள சிந்தாமனி அரசு நியாய விலைக்கடை அருகே டாட்டா ஆஸ் வாகனத்தில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேசன் அரிசி மூட்டைகளை மேற்படி எதிரிகள் இருவரும் ஏற்றி கொண்டிருக்கும் போது இரவு பணி முடித்துச் சென்ற காவலர் கருப்பசாமி சந்தேகத்தின் பேரில் எதிரிகளை விசாரனை செய்ய காவல் நிலையம் அழைத்த போது, வாகனத்தின் டிரைவர் கணேசன் ஓடி விட்டதால் மற்றொரு நபரான வண்டியின் உரிமையாளர் அமித்தை வாகனத்துடன், வண்டியை அயனாவரம் காவல் நிலையத் அழைத்து வந்து ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில்,
வாகன உரிமையாளர் அமித் என்பவரை விசாரித்ததில் அரிசி மூட்டைகளை செனாய் நகர் பகுதியில் உள்ள மாடு உரிமையாளர்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்ய எடுத்து செல்ல இருந்ததாக தெரியவரவே, உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவு புலனாய்வு காவல்துறையினர் அமித்தை கைது செய்து டாட்டா ஆஸ் வாகனம் மற்றும் அதில் கடத்திச் செல்ல வைக்கப்பட்டிருந்த 900 கிலோ மதிப்புள்ள 18 மூட்டைகள் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும், அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது...

tn_che_04_ration_rice_bandals_smuggling_one_arrested_food_civil_cid's_action_script_7204894
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.