சென்னை தாம்பரம் சந்தோஷபுரம் செக் போஸ்ட் அருகில் போக்குவரத்து காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக புல்லட்டில் குடிபோதையில் இளைஞர் ஒருவர் வந்தார்.
இளைஞருக்கு காவல் துறையினர் அபராதம் விதித்து ரசீது வழங்கினர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் செல்வம் என்பவரது கன்னத்தில் அறைந்தார். இதில் மயக்கமடைந்த காவலர் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
விசாரணையில் அவர் குரோம்பேட்டையைச் சேர்ந்த அஸ்வின்ராஜ் (26) என்பது தெரியவந்தது. பின்னர் இளைஞரை சேலையூர் காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போலீஸார் முன்பே அறைந்த பெண்